போதையில் கள்ளக்காதல்.. உல்லாசமாக இருந்த வீடியோவால் சிக்கல்!

மும்பையில் வசித்து வந்த ரோசினா என்ற 31 வயது பெண் அடிக்கடி பாருக்கு சென்று மது அருந்தும் பழக்கம் வைத்திருந்தார். அப்போது அதே பாருக்கு வந்து செல்லும் ஒரு நபருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி ரோசினா வீட்டிற்கு வந்த அந்த நபர் ரோசினாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

ரோசினா தனது செலவுக்காக கேட்கும்போதெல்லாம் அந்த நபர் பணத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அதிக ஆசைப்பட்ட ரோசினா பெரும் தொகை ஒன்றை கேட்க அதனை கொடுக்காமல் அந்த நபர் இழுத்தடித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரோசினா, கள்ளக்காதல் உறவை அவருடைய மனைவியிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து ஒரு நாள் ரோசினாவின் வீட்டிற்கு வந்த நபர் அதிக அளவில் மது கொடுத்து மயக்கம் அடைய செய்து அதன்பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துள்ளார்.

ரேசினாவின் நடமாட்டம் இல்லாததை அறிந்த உறவினர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தப்போது கட்டிலில் உயிரிழந்து காணப்பட்டார். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தப்போது ஒருவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தற்போது அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

கள்ளக்காதல்போதை
Comments (0)
Add Comment