உலகிலேயே பாதுகாப்பான 20 விமானங்கள்!

2020ஆம் ஆண்டின் மிக பாதுகாப்பான விமானங்கள் பட்டியலை ஏர்லைன்ஸ் ரேட்டிங் எனப்படும் விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மறு ஆய்வு வலைதளம் வெளியிட்டுள்ளது.

விமானங்களைப் பற்றி கைதேர்ந்த வல்லுநர்களால் இயக்கப்படும் இந்த வலைதளத்தில் பாதுகாப்பான முதல் 20 விமான நிறுவனங்களின் பட்டியல் வெளிவந்துள்ளது.

இதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘க்வண்டாஸ்’ விமான நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

பாதுகாப்பான விமான நிறுவனங்கள் பட்டியலில் 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை முதல் இடத்தில் இருந்தது க்வண்டாஸ் நிறுவனம்.

2018ஆம் ஆண்டு மட்டும் ஏர்லைன்ஸ் ரேட்டிங் மூலம் முடிவு செய்ய முடியாததால் பெயர் வரிசையில் முதல் 20 விமான நிறுவனங்களை அறிவித்தது. அதன் பிறகு தற்போது மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது க்வண்டாஸ் நிறுவனம்.

இந்த தரவரிசை வெறும் அதிகாரிகளின் அறிக்கைகளைப் பார்த்து வழங்கப்படவில்லை. ஆண்டு முழுவதும் அந்த விமான நிறுவனம் செய்த விபத்துகள், அந்த விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறுகள் என்று மிகவும் உன்னிப்பாகக் கவனித்து இந்தப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுவதாக ஏர்லைன்ஸ் ரேட்டிங் தெரிவித்தது.

இந்தப் பட்டியலில் ஏர் நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், தைவானுடைய ஏவா, அபுதாபியைச் சேர்ந்த எதி ஹாட் ஆகிய விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

பாதுகாப்பான விமானங்கள் பட்டியலை வெளியிடும் ஏர்லைன்ஸ் ரேட்டிங்ஸ் ஆண்டுதோறும் 405 விமான நிறுவனங்களைக் கண்காணித்து அதைப்பற்றிய கருத்துகளை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான 20 விமானங்கள்
Comments (0)
Add Comment