தென்னிந்திய சினிமாவின் க்ளாமர் குயினாக திகழ்ந்து 90களில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஷாகிலா. ஆரம்பத்தில் படவாய்ப்புக்காகவும் குடும்ப வறுமை காரணமாகவும் அந்தமாதிரி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது 40 வயதை தாண்டிய ஷகிலா உடல் எடையை குறைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷகிலா பிரபல கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரசில் இணைந்த ஷகிலாவிற்கு மனித உரிமைத்துறையின் மாநில பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
அவருக்காக காங்கிரசின் அடையாள அட்டையும் அத்துறையின் தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் பிறப்பித்து கூடி சீக்கிரமே கட்சியின் பிரச்சாரத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
இதை கேள்விபட்ட அரசியல்வாதி சிலர், ஒரு அரசியல் இல்லாத சிறைக்கு செல்லாத, ஏழை மக்களுக்கு உதவாத நபருக்கு முக்கிய பொறுப்பா? என்று கேள்வி கேட்டுள்ளனர்.
மேலும் நடிகை நமீதா, ஷகிலா காங்கிரசிற்கு என்ன சம்பந்தம் என்று நாங்கள் கேட்ட முடியாது. கட்சியில் சேருவது அவரது தனிப்பட்ட ஈடுபாடு மறும் அவரது விருப்பம் என்று கூறியுள்ளார்.