தமிழ் சினி திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது.
கமல் அரசியல் களத்தில் பிஸியாக இருப்பதால் இதனை சிம்பு தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டு வருகிறது. மேலும் இந்த சீசனில் யார் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என கெஸ்ஸிங் லிஸ்ட் ஒன்றும் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி பிரபலங்களை தொடர்ந்து யூடியூப் பிரபலங்களையும் களம் இறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளது.
இணையத்தில் செம ட்ரெண்டாக்கி 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வரும் பாடல் என்ஜாய் என்சாமி. பாடகி தீ பாடி நடித்துள்ள இந்த ஆல்பம் பாடலை இணைந்து பாடியிருப்பவர் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு.
இவரைத்தான் பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளராக கலந்து இருக்க விஜய் டிவி தீயாக வேலை செய்து வருகிறது.
இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.