வில்லாபுரம் பத்மா தியேட்டர் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து கத்தியால் குத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை ஜெய்ஹிந்த்ந்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி (69). இவர் மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கடையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பத்மா தியேட்டர் எதிரே உள்ள கற்பக நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் பொலிஸ் இன்ஸ்பெட்டர் பிரபு தலைமையில் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.