தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. இதற்கு முன்னதாக இவர் கன்னட மொழியில் ஜந்து 3 படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்குவில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ராஷ்மிகா சென்னை வந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொஞ்சம் குண்டாக இருந்த ராஷ்மிகா தற்போது எடையை குறைத்து ஒல்லியாக கும்முனு மாறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.