தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். ஆரம்பகாலத்தில் முதல்வன் படம் ஆரம்பித்து ஒரு படம் விடாமல் ஏ ஆர் ரகுமானுடன் கூட்டணி வைத்திருந்து வருபவர் இவர் ஒருவர்தான்.
இந்நிலையில் அவருடன் கூட்டணியில் 2003ல் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று பாய்ஸ். சித்தார்த், ஜெனிலியா உள்ளிட்ட பல கலைஞர்கள் நடித்திருந்தனர்.
அதில் ஹரிணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெனிலியாவிற்கு முன்னதாக வேறு நடிகையை தான் உதவி இயக்குனர் தேர்வு செய்தாராம். பல ஆண்டு உண்மையை தற்போது பாய்ஸ் படத்தின் உதவி இயக்குனாராக பணியாற்றியவர் பேட்டியொன்றில் கூறியுள்ளார்.
பாய்ஸ் படத்தின் ஹரிணி கதாபாத்திரத்தை செலக்ட் செய்ய ஷங்கர் மற்றும் உதவி இயக்குனர்கள் மிஸ் மெட்ராஸ் நிகழ்ச்சி சென்றிருந்தோம். அப்போது வெற்றியாளர்களுக்கு கிரீடம் சூட்ட வந்த முன்னால் மிஸ் இந்தியா நடிகை திரிஷா வந்திருந்தார்.
அப்போது நடிகை திரிஷாவை நாங்கள் வளைத்து வளைத்து போட்டோ எடுத்து பாய்ஸ் படத்தில் இவர் நடிக்கலாம் என்று கூறினோம். அதற்கு ஷங்கர், இந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது என்றும் வேறு யாராவது தேடுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் நாங்கள் அதிர்ச்சியில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்து எடுக்க சென்றோம்.
அப்போதுதான் நடிகை ஜெனிலியாவை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளார்.