செய்திகள்

15 வயதில் நடிகையாக பணத்தில் புரளும் விக்ரமின் ரீல் மகள் சாரா

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் சாரா அர்ஜுன்.

நடிகர் விக்ரமிற்கு மகளாக தெய்வத்திருமகள் படத்தில் நடித்து நல்ல இடத்தினையும் விருதினையும் வாங்கி பல படங்களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சாரா தற்போது கல்லூரி மாணவியாக ஒரு Quotation Gang என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். நடிகை பிரியாமணி லீட் ரோலில் நடிக்கவிருக்கும் இப்படத்தில், பழிவாங்கும் மாணவியாக நடிக்கவிருக்கிறார்.

அருண்விஜய் நடித்த பாக்ஸ்ர் படத்தின் இயக்குநர் விவேக் இப்படத்தினை இயக்கவுள்ளார். வரும் டிசம்பர் மும்பையில் படப்பிடிப்பு துவங்கி கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மீண்டும் மும்பை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடிக்கவிருக்கிறதாம்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top