கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா – விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து… அதை இன்ஸ்டாவில் போட்டு லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட நயன்தாரா – விக்கி இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாட, தனி விமானம் மூலம் கொச்சி பறந்தனர்.
அங்கு, நயன்தாராவுடன் காதல் ரசம் சொட்ட சொட்ட ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றினார்.
இதை தொடர்ந்து, இந்த ஜோடி கோவாவில் முகாமிட்டது. அங்கு நயன்தாராவின் அம்மா பிறந்தநாள் மற்றும் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை செம்மையாக கொண்டாடி மகிழ்ந்தார் நயன்.
மேலும் வெள்ளை உடையில் இவர் கொடுத்த விதவிதமான புகைப்படங்களும்…. சமூக வலைத்தளத்தில் செம்ம வைரலாக பரவியது.
கடந்த 5 வருடங்களாக இந்த நயன் – விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா…? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இவர்களுடைய திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியான நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது நயன்தாரா, தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிற முடிவில் உள்ளாராம். ஆனால் இது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்பதை நயன் – விக்கி தான் கூறவேண்டும்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!