செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு தமிழ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மேலும் ஒரு தமிழ் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீஸன் தொடர்பாக வெளியான இரண்டு புரமோ வீடியோக்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. நான்காவது சீஸனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார்.

கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் எந்த புதிய திரைப்படங்களும் வெளிவரவில்லை. ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை என்பதால் ரசிகர்களின் பொழுதுபோக்கு இடம் இல்லாமல் உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சரியான நேரத்தில் ஒளிபரப்பப்படுவதால் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழ் நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ரேணிகுண்டா என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகி அதன் பின் கோ, ரகளபுரம், அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சஞ்சனாசிங். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசனின் போட்டியாளராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கிரண் ரத்தோட், ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்மு, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் சஞ்சனாசிங்கும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top