செய்திகள்

பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி… 7 பேர் கொண்ட கும்பல் செய்த கொடூர செயல்!

இந்தியாவில் 50 வயது பெண்னை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள கவுர்ச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பயாம்பூர் பகுதியில் கணவனை இழந்த 50 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவ தினத்தன்று அவரின் வீட்டிற்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல், அவரை கட்டாயப்படுத்தி மதுவை வாயில் ஊற்றியுள்ளனர்.

இதனால் அந்த பெண் மயங்கி விழுந்துவிடவே, குறித்த கும்பல் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த கும்பல் செல்போனிலும் வீடியோ எடுத்துள்ளனர்.

இதில் 6 பேர் அந்த வீடியோவை அழித்துவிட்ட நிலையில், விகாஷ்குமார் என்பவர் மட்டும், அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதால், இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பொலிசார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தினாகுமார், விகாஷ்குமார், ரூஷன்குமார், சன்னிகுமார், பிந்துகுமார் மற்றும் முகேஷ்குமார் ஆகிய 6 பேரை கைது செய்துள்ளனர்.

விகாஷ்குமாரிடம் இருந்து பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோவையும் கைப்பற்றிய அதை அழித்துள்ளனர், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top