தமிழ் சினிமாவில் ஜீனியஸ் இயக்குனர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
ஆனால் அதன் பிறகு செல்வராகவன் இயக்கும் படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இன்னும் கொடுமை என்னவென்றால் ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது தியேட்டரில் ரசிக்காமல் டிவியில் பார்த்து சூப்பர் என்று சொல்கிறார்கள் ரசிகர்கள்.
இது எவ்வளவு பெரிய கொடுமை. அதன் பிறகு கடைசியாக சூர்யாவை வைத்து என் ஜி கே என்ற அரசியல் படம் ஒன்றை இயக்கி இருந்தார். இந்த படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
செல்வராகவனின் புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, காதல் கொண்டேன் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். தமிழ் சினிமாவில் பெரிய நாயகியாக வலம் வருவதற்கு செல்வராகவனின் படங்கள் பெரிதும் உதவின.
இந்நிலையில் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால். ஆனால் திருமணமான நான்கே வருடங்களில் அவருடன் விவாகரத்து பெற்றுக்கொண்டு தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
அதற்கு காரணம் சோனியா அகர்வால் ஒரு மொடா குடிகாரி என்கிறது கோலிவுட் வட்டாரம். சோனியா அகர்வால் மதுவுக்கு அதிகமாக அடிமையாகி இருந்ததால் செல்வராகவனுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை வந்து கொண்டிருந்ததாம்.
இதனால் டென்ஷனான செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் சோனியா அகர்வால் தங்களது குடும்பத்திற்கு வேண்டாம் என முடிவு செய்து இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்களாம்.
படவாய்ப்பு இல்லாத சமயத்தில் கூட சோனியா அகர்வால் குடித்துவிட்டு ஹோட்டல் அறையில் கலாட்டா பண்ணிய செய்தி எல்லாம் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!