ஜகமே தந்திரம் படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் என்ற கேங்க்ஸ்டர் படம் மே 1 ஆம் திகதி வெளியாக இருந்த நிலையில் பட வெளியீட்டில் மாறுதல் ஏற்பட்டது.
அந்த படத்தின் ரகிட ரகிட என்ற பாடல் மற்றும் படத்தின் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்தது தனுஷ் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் அல்லது டிரைலர்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரின் படம் OTT தளத்தில் வெளியானதால் அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படமும் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஏற்கனவே இந்த செய்திகள் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் நடித்த சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
OTT தளத்தில் ஜகமே தந்திரம் படத்தை வெளியிட வைக்காமல் விட மாட்டார்கள் போல வருத்தத்தில் இருக்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள். இருந்தாலும் தியேட்டரில்தான் வெளியிடுவார்கள் என நம்பிக் கொண்டிருக்கிறார்கள். காத்திருப்போம்.
எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…
Facebook :- LIKE
Facebook Groups :- Joined
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!