செய்திகள்

உடல் எடையை வேகமா குறைக்கனுமா? காது மசாஜ் ட்ரை பண்ணுங்க

காது மசாஜ்.

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை எப்போதும் உற்சாகத்துடன் வைத்துக் கொள்ள ஏதேனும் வழி இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படி ஒன்று உள்ளது. அது தான் காது மசாஜ்.

இதனை செய்வதன் மூலம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்திடலாம். இதிலுள்ள மற்றொரு முக்கிய அம்சம், இதனை எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

காது மசாஜ் என்பது காது ரிஃப்ளெக்சாலஜி அல்லது ஆரிக்குலோதெரபி என்றும் அழைக்கப்படுகிறது. இது காதில் உள்ள சில அழுத்த புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கிறது.

அது மட்டுமல்லாமல், காது மசாஜ் மற்ற உடலியல் அறிகுறிகள், வியாதிகள் மற்றும் மார்பு, அடிவயிறு, கீழ் முதுகு மற்றும் கால் பகுதிகளில் உள்ள நோயியல் கோளாறுகளுக்கும் உதவும். காது மசாஜ் செய்வதன் பிற நன்மைகள் மற்றும் அதை எப்படி செய்வது என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

சில ஆய்வுகள், உடலில் ஏற்படக்கூடிய தசை வலியை போக்குவதற்கு காது மசாஜ் சிறந்த வழி என்பதையை கண்டறிந்துள்ளது. காதை மென்மையாக இழுத்து, தேய்ப்பதன் மூலம், எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும் நரம்பு முடிவுகளை தூண்டுகிறது.

எண்டோர்பின், ஃபீல்-குட் ஹார்மோன் வலியைக் குறைக்க உதவுகிறது. மேலும், காது மசாஜ் செய்வதால், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவிடும்.

தலை வலி மற்றும் ஒற்றை வலி போன்ற வலிகள் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடியவை. அவற்றில் இருந்து உடனடியாக விடுபட சந்தைகளின் அதிகப்படியான மாத்திரைகள் கிடைக்கின்றன.

ஆனால், அது போன்ற மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது தவறு. இதுபோன்ற வலிகளை போக்க வலிநிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் இருப்பதே சிறந்தது.

அடுத்த முறை, இது போன்ற வலிகளை ஏற்பட்டால் காது மசாஜை முயற்சித்து பாருங்கள். மசாஜ் செய்த பிறகு புதினா டீ குடிப்பது கூடுதல் பலனை தந்திடும்.

மனஅழுத்தம் நிறைந்த சூழலில் இருந்து விடுபட காது மசாஜ் செய்வது ஒரு சிறந்த வழியாகும். அடுத்தமுறை, மனஅழுத்தம், பதற்றம், பயம், அமைதியின்மை போன்றவற்றால் அவதியுற்றால், காதில் சொர்க்க வாயில் புள்ளியில் வட்ட வடிவில் தேய்த்து மசாஜ் செய்யவும்.

ஹெவன்லி கேட், அதாவது சொர்க்கவாயில் புள்ளி என்பது. காதின் மேல் ஷெல்லில், முக்கோணம் போன்ற வெற்று நுனியில் அமைந்துள்ளது.

அதிகப்படியான உடல் எடை குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் ஒன்றுமில்லை. ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றை தவிர்த்து, மேலும் சில எளிய டிப்ஸ் மற்றும் தந்திரங்கள் உடல் எடை குறைப்பிற்கு தேவைப்படுகிறது. காதின் வெவ்வேறு புள்ளிகளை தேய்ப்பதன் மூலம், வேகமாக உடல் எடையை குறைத்திட முடியும்.

நிம்மதியான, ஆழ்ந்த மற்றும் தொந்தரவில்லாத தூக்கத்தை பெற்றிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பதாக இருக்கும். ஆனால், அதற்கு முதலில் அவர்களது மனமானது அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும்.

உடலை அமைதிப்படுத்துவதற்கு காது மசாஜ் ஒரு சிறந்த வழி என்றே கூறலாம். எனவே, இரவு தூங்குவதற்கு முன்பு காதுகளை மசாஜ் செய்துவிட்டு தூங்கி பாருங்கள். நிச்சயம் நிம்மதியான தூக்கத்தை நீங்கள் பெறுவீர்கள்.

காலை எழுந்தவுடன் ப்ரஷாக உணரவேண்டுமென, ஒரு டம்ளர் தண்ணீரை ஒரே மடக்காக குடிப்பவரா நீங்கள்? அப்படியெனில், இனி காலை எழுந்தவுடன் சிறிது நேரத்திற்கு காதை மெதுவாக தேய்த்து விடுங்கள்.

காதுகளில் உள்ள நரம்புகளின் அழுத்தம் கொடுக்கப்படும் போது, மூளை சிறப்பாக வேலை செய்ய துவங்குவதோடு, ப்ரஷாகவும் நீங்கள் உணருவீர்கள்.

எனவே, இனி எப்போதெல்லாம் சோம்பலாக உணர்கிறீர்களோ, அப்போதெல்லாம் காது மசாஜ் செய்யுங்கள், உடனே புத்துணர்ச்சியை பெற்றிடலாம்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top