செய்திகள்

அத்துமீறிய இயக்குநர்.. செருப்பை கழட்டிய பிரபல பாடகி

சமீப காலமாக சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பகிரங்கமாக நடிகைகள் மற்றும் சினிமா சார்ந்த பெண்கள் வெளிப்படையாக மீ டூ மூலம் உண்மையை வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

படவாய்ப்புக்காக செல்லும் நடிகைகளிடம் படவாய்ப்பு தருவதாகக் கூறி அவர்களின் வாய்ப்பை தனது வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பற்றி புட்டுப்புட்டு வைத்தார்.

அதேபோல் பல இளம் நடிகைகள் கூறி வந்தனர். அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி பாடகியாக இருப்பவர் பிரணவி ஆச்சார்யா. இவர் தெலுங்கில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடன இயக்குனர் ரகு என்பவரை திருமணம் செய்து தற்போது அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

பாடகி பிரணவி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் பாடல் வாய்ப்புகள் தேட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார்.

அதேபோல் படத்தில் பாட வாய்ப்பு வேண்டும் என்றால் அவர்களின் ஆசைக்கு இணங்க வேண்டும் இல்லை என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.

இதில் ஒரு முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி தனது ரெக்கார்டிங் தியேட்டருக்கு வரவழைத்தார். ஆனால் அங்கு எந்த இசைக் கலைஞர்களும் இல்லை. இயக்குனர் மட்டும் தனியாக இருந்தார்.

அப்பொழுது அந்த இயக்குனர் என்னிடம் மிகவும் தவறாக நடந்துக் கொண்டார், அங்கு இருந்து தப்பி செல்லுவதற்க்காக உடனே எனது காலில் இருந்த செருப்பை கழட்டி காட்டி விட்டு அங்கு இருந்து தப்பித்து வந்து விட்டேன், அந்த இயக்குனர் யார் என்ற தகவலை வெளியிட வேண்டும் என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top