செய்திகள்

சூரரைப்போற்று படத்தை OTTயில் வெளியிட்டு கெத்து காட்டிய சூர்யா!

sooraraipottru

சூர்யாவின் படங்கள் சமீபகாலமாக பெரிய அளவு வசூல் செய்யவில்லை என்றாலும் அவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் சூரரைப்போற்று படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவியது.

நீண்ட நாட்களாக வெற்றியை தேடிக் கொண்டிருந்த சூர்யாவுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்தில் வெளியிடப் போவதாக அறிவித்தார்.

அக்டோபர் மாதம் 30ஆம் திகதி அந்தப்படம் வெளியிடப்போவதாக தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தெரிவித்திருந்தார் சூர்யா. இதற்கு பின்னணியில் பல தியேட்டர் ஓனர்கள் இருப்பதாக தெரிகிறது.

சூர்யாவின் மனைவி ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் தான் முதல் முதலில் OTTயில் ரிலீசாகி தியேட்டர் ஒனர்களை கோபப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து சில படங்களில் வெளியாகியது. ஆனால் எந்த படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதற்கிடையில் தொடர்ந்து அனைத்து தயாரிப்பாளர்களும் OTT தளத்தை நோக்கி பயணித்ததால் தியேட்டர் ஓனர்கள் இதற்கு காரணமான சூர்யாவை சும்மா விடக்கூடாது என்பதற்காக அவரது படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்யமாட்டோம் என தெரிவித்தனர்.

ஆனால் சூர்யா அதற்கெல்லாம் அசரவில்லை. என்னால் OTT தளத்திலும் சூப்பர் ஹிட் படம் கொடுக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக அமேசான் நிறுவனத்துடன் கை கோர்த்து படத்தை வெளியிட உள்ளார்.

உண்மையிலேயே சூரரைப்போற்று படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால் தியேட்டர் ஓனர்கள் நல்ல வசூல் பார்த்திருப்பார்கள். ஆனால் யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொண்டது போல தேவையில்லாமல் வாய்விட்டு கெடுத்துக்கொண்டனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

தியேட்டர்காரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் சூர்யா இந்த முயற்சி எடுத்திருப்பதாக தெரிகிறது. இனியும் என்னிடம் வாலாட்ட வேண்டாம் என எச்சரிப்பது இந்த செயல் அமைந்துள்ளது. இதனால் தற்போது தியேட்டர் ஓனர்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top