செய்திகள்

பாடகர் எஸ்.பி.பியின் உடல் நலம் பாதிக்கப்பட பாடகி தான் காரணமா?

கடந்த சில நாட்களாக பலரின் மனதையும் கவலையில் ஆழ்த்திய செய்தி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதே.

அவரின் உடல் நலம் குறித்து மருத்துவமனை அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அவர் முழுமையாக குணமடைந்து மீண்டு வரவேண்டும் என உலகம் முழுக்க இருக்கும் அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட பாடகி மாளவிகா தான் காரணம் என வாட்ஸ் அப்பில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் மாளவிகா விளக்கமளித்துளார். ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஜூலை 30,31 ல் எஸ்.பி.பி பங்கேற்ற தெலுங்கு டிவி நிகழ்ச்சி படப்பிடிப்பு செய்யப்பட்டது. 2 ம் நாளில் கலந்துகொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருவர்.
ஒருவேளை எனக்கு கொரோனா இருந்திருந்தால் மற்ற மூவருக்கோ, நிகழ்ச்சி தொகுப்பாளருக்கோ கொரோனாவை பரப்பியிருப்பேன்.

கடந்த 5 மாதங்களாக பாதுக்காப்பு கருதி வெளியில் நான் செல்லவேயில்லை. டிவி படப்பிடிப்புக்காக தான் முதன் முதலாக வெளியே வந்தேன்.

எஸ்.பி.பி மற்று சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அறிந்து நானும் என் குடும்பத்தாரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். நான் மற்றும் என் அம்மா, என் மகள் மூவருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்ததது.

என் கணவருக்கு கொரோனா இல்லை. கடுமையான சூழ்நிலையில் இருக்கிறோம். எங்களை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். வதந்தி பரப்பியவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என மாளவிகா கூறியுள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top