செய்திகள்

குழந்தைகள் உறக்கத்தில் சிரிப்பது ஏன் தெரியுமா?

உறக்கத்தில் குழந்தைகள் சிரிப்பது ஏன் என கேட்டால், குழந்தைகளுக்கு கடவுள் விளையாட்டு காட்டுவார் அதனால்தான் உறக்கத்தில் குழந்தை சிரிக்கும் என பெரியவர்கள் சொல்வார்கள்.

ஆனால் உண்மை என்னவென்றால் பிறந்த இரண்டு வாரங்கள் முடிந்ததுமே குழந்தைகள் கனவு காணத் தொடங்கிவிடும் என்பது தான்.

அதாவது அன்னையின் அன்பான அரவணைப்பிலேயே இருக்கும் இனிமையான நேரங்கள் குழந்தைகளுக்கு அதிகமாக நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

அதனால் தான் குழந்தைகள் தூங்கும்போது கனவில் அழகிய சிரிப்பு வரும். இதற்கு மாறாக எப்போதும் சண்டை சப்தம் இருந்தால் பயமுறுத்தும் கனவுகள் வரும். அதனால்தான் குழந்தைகள் அழத் தொடங்கும்.

இன்னும் சொல்லப் போனால் 18 மாதங்களுக்கு பிறகு குழந்தைகளின் கற்பனைத் திறன் வேகமாக வளரும். அப்போது சில பயமுறுத்தும் கனவுகளும் வரும்.

எனவேதான் ஆரம்ப காலகட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் சிறு சிறு விஷயங்களுக்கு கூட குழந்தைகள் பயப்படும். உறக்கத்தில் குழந்தைகளுக்கு கனவு வரும் போது அருகிலிருந்து தட்டி கொடுத்தாலே போதுமானது. நாம் அருகில் தான் உள்ளோம் என்பதையும் குழந்தை உணரும்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top