செய்திகள்

சிறுமியின் கை, கால்களை கட்டி நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்

வேலை வாங்கி தருவதாக அழைத்து.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது.

இத்தகைய ஊரடங்கால் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கட்டாய மற்றும் குழந்தை திருமணங்கள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 4 பேருக்கு பெற்றோர்களால் கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படவிருந்தது.

ஆனால் இதுகுறித்து ரகசியமாக தகவல் தெரியவந்த நிலையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் அதனை தடுத்து நிறுத்தி, சிறுமிகளை மீட்டு அரசு காப்பகங்களில் தங்க வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கழிஞ்சூரை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இரவில் வலுக்கட்டாயமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மறுநாள் விடிந்ததும் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சிறுமி கூறுகையில், இரவில் எனது பாட்டி வீட்டில் நான் நன்கு தூங்கிக் கொண்டிருந்த போது, எனது கை கால்களை கட்டி, கழுத்தில் தாலி கட்டிவிட்டனர்.

இந்நிலையில் விடிந்ததும் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் புகார் கொடுக்க இங்கு வந்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சமூக நலத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுமியை மீட்டு பாதுகாப்பான காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top