செய்திகள்

ரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசி படமான தில் பேச்சாரா வரும் ஜூலை 24ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட அந்த படத்தின் டிரைலர் 60 மில்லியன் வியூஸ் கடந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் லைக்ஸ் சாதனைகளை எல்லாம் கடந்து, தற்போது 9.4 மில்லியன் லைக்ஸ் உடன் உலகளவில் புதிய சாதனையை சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ‘தில் பேச்சாரா’ பட டிரைலர் படைத்திருக்கிறது.

 

உயிரோடு இருக்கும் போது, அவரது நடிப்புக்கு இத்தனை பெரிய அங்கீகாரத்தை இந்த உலகம் கொடுத்திருந்தால், இந்நேரம் அவர் உயிரோடே இருந்திருப்பார் என அவரது ரசிகர்கள் வருந்தி வருகின்றனர்.

இயக்குநர் முகேஷ் சப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் சஞ்சனா சங்கி நடிப்பில் உருவாகி உள்ள தில் பேச்சாரா படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள டைட்டில் பாடலான ‘தில் பேச்சாரா’ பாடல் வீடியோ தற்போது வெளியாகி, சுஷாந்த் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

இந்த பாடலுக்கு இசை அமைத்தது மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானே பாடியும் உள்ளார். டைட்டில் டிராக்கை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ள நிலையில், #ARRahman என்ற ஹாஷ்டேக்கை அவரது ரசிகர்கள் இந்தியளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top