செய்திகள்

கையில நரம்பு அசிங்கமா தெரிவதற்கு காரணம் என்ன தெரியுமா?

hands-causes-behind-veins-popping-out

சிலருக்கு கைகள் மற்றும் கால்களில் நரம்புகள் நன்கு புடைத்துக் கொண்டு கைகள் வயதானவர்கள் போன்று அசிங்கமாக காட்சியளிக்கும்.

பொதுவாக வயதாகும் போது தான் இம்மாதிரியான தோற்றம் இருக்கும் எனினும், இளமையிலேயே கை, கால்களில் நரம்புகள் தெரிந்தால் அதற்கு பின்னணியில் சில காரணங்கள் உள்ளன.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி அழகையும், உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ளவும் சிறப்பான வழி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடற்பயிற்சி கைகளில் சில கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வலிமைப் பயிற்சிகளை செய்வதால் தமனிகளில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
இந்த பயிற்சிகள் தசைகள் கடினமாவதற்கும், நரம்புகளை தோலின் மேற்பரப்பில் தள்ளுவதற்கும் காரணமாகிறது. இதனால் கைகள் மற்றும் கால்களில் நரம்புகள் புடைத்து தெரிகிறது.

இதற்காக கவலைப்பட வேண்டாம். எப்போது கவலை கொள்ள வேண்டுமெனில், நரம்புகளில் வலி அல்லது கடுமையாக வீங்கி இருந்தால் உடன மருத்துவரை அணுக வேண்டும்.

பராமரிப்பு இல்லாமை

பொதுவாக அழகாக தெரிவதற்கு இளமைக் காலத்தில் ஆன்டி-ஏஜிங் க்ரீம் முதல் மாய்ஸ்சுரைசர் என்று பலவற்றைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வருவோம். திடீரென்று அதிகப்படியான வேலைப்பளு, குழந்தைகளை கவனிப்பது மற்றும் பல வேலைகளால் சோம்பேறித்தனப்பட்டு சருமத்திற்கு கொடுத்து வந்த பராமரிப்பை நிறுத்திவிடுவோம்.

அதோடு பலர் முகத்திற்கு தவறாமல் பராமரிப்பைக் கொடுத்துவிட்டு, கை, கால்களுக்கு பராமரிப்பு கொடுப்பதை நிறுத்திவிடுவர். இந்த செயலின் விளைவாகவே கைகள் வயதான தோற்றத்தில் காட்சியளிக்கிறது.

இன்று முதல் உங்கள் கை, கால்களுக்கும் போதுமான பராமரிப்பைக் கொடுக்க ஆரம்பியுங்கள். இதை தொடர்ந்து செய்யும் போது, நரம்புகள் தெரிவது குறைந்து, கைகளும் அழகாக இளமையுடன் காட்சியளிக்கும்.

ஒருவருக்கு வயதாகிவிட்டால், உடலில் கொழுப்புக்களின் அளவு குறைந்து கைகளில் சுருக்கங்களுடன், நரம்புகளும் தெரிய ஆரம்பிப்பது இயற்கை.

மரபணுக்கள்

நரம்புகள் புடைத்துக் கொண்டு இருப்பதற்கு தவிர்க்க முடியாத ஓர் காரணமாக மரபணுக்கள் உள்ளன. ஒருவரது தோற்றம், நோய்களின் அபாயம், ஏன் நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரிவது போன்றவற்றில் மரபணுக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.
உங்களின் அம்மா, அப்பா, உடன் பிறப்புக்களுக்கு கைகளில் நரம்புகள் புடைத்து தெரியுமானால், உங்களுக்கும் நரம்புகள் புடைத்து தெரிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இத்தகையவர்கள் இந்த பிரச்சனையை சரிசெய்ய நினைத்தால், லேசர் சிகிச்சை அல்லது கொழுப்பு நிரப்புதல் செயல்முறையை மேற்கொள்ளலாம்.

கார்டியோவாஸ்குலர் நோய்கள் மற்றும் கோளாறுகள்

நீண்ட கால இதய நோய் உள்ளவர்களுக்கு, சிரை இரத்தம் மந்தமாகவும் மெதுவாகவும் இருக்கும். இதனால் நரம்புகள் வீங்கி காணப்படலாம். ஆனால் இதற்காக உடனே இதய நோய் இருக்குமோ என்று அச்சம் கொள்ள வேண்டாம்.

இதய நோய் இருந்தால் உடலின் பிற பகுதிகளிலும் அறிகுறிகள் தென்படும். எனவே உடனே இதய நோய் என்று முடிவெடுத்து விடாதீர்கள்.

உங்களுக்கு கைகளில் நரம்புகள் வீங்கி தென்பட்டு, அத்துடன் மூச்சு விடுவதில் சிரமம், படபடப்பு போன்ற அறிகுறிகளையும் உணர்ந்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

கொழுப்பு குறைவான உடல்

உங்கள் உடலில் கொழுப்பு மிகவும் குறைவாக இருந்தால், சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பின் அளவும் குறைவாக இருக்கும். இதனால் நரம்புகள் சருமத்திற்கு மிகவும் அருகில் வந்து, இதன் விளைவாக கைகளில் நரம்புகள் புடைத்து தெரியும்.

உங்கள் உடலில் போதுமான அளவு கொழுப்பு இல்லாததை நீங்கள் உணர்ந்தால், ஊட்டச்சத்து நிபுணரை அணுகி அவர் கூறும் டயட் திட்டத்தை பின்பற்றுங்கள். இது உடலில் கொழுப்புக்களின் அளவை அதிகரிக்க உதவும்.

கர்ப்பம்

கருவில் உள்ள குழந்தைக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்க இரத்தம் மற்றும் சத்துக்கள் உடலில் அதிகரிப்பதனால், கர்ப்ப காலத்தில் நரம்புகளில் இரத்த ஓட்டம் 20-40 சதவீதம் வரை அதிகரிக்கும்.

இதனால் கைகளில் மட்டுமின்றி, மார்பு பகுதி, அடிவயிறு மற்றும் கால்களில் கூட நரம்புகள் புடைத்து காணப்படலாம். இதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த நரம்புகள் பிரசவத்திற்கு பின் மறைந்துவிடும்.

எடை இழப்பு

உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போது, சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்பு லேயர்களும் உருக ஆரம்பித்து, நரம்புகள் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும். இதனால் கைகளில் நரம்புகள் புடைத்து தெரியும். இதற்காக பதட்டமடையத் தேவையில்லை. எடை இழப்பு செயல்முறையின் போது இம்மாதிரி ஏற்படுவது சாதாரணம் தான். ஒருவேளை உங்களுக்கு நரம்புகளில் வலி தெரிந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top