செய்திகள்

கொரோனா குறித்த அடுத்த அதிர வைக்கும் செய்தி! தடுப்பது எப்படி?

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நாவல் கொரோனா வைரஸ் தற்போது SARS-CoV-2 என அழைக்கப்படுகிறது.

அண்மையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்ற சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காற்றில் உள்ள சிறிய துகள்கள் மூலம் கூட வைரஸ் மக்களை பாதிக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

முன்னதாக, புதிய கொரோனா வைரஸால் ஏற்படும் நோயான கோவிட்-19 வான்வழி பரவுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பால் 2020 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் திகதி உலகளாவிய பெருந்தொற்று நோயாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸால் இன்று வரை 11, 343,890 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் குறைந்தது 531, 789 பேர் இறந்துள்ளனர். பிரபல இதழின் அறிக்கையின் படி, 32 நாடுகளில் உள்ள சுமார் 239 விஞ்ஞானிகள் உலக சுகாதார அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் கொரோனா பரவும் முறைகள் குறித்த பரிந்துரைகளை திருத்துமாறு ஐ.நா சுகாதார நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஆரம்பத்தில் உலக சுகாதார நிறுவனம் இதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறியது.

பொதுவாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளியின் இருமல், தும்மல் வழியாக மட்டுமின்றி, பேசும் போதும் காற்றின் நீர்த்துளிகள் வழியே மக்கள் மத்தியில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு நீண்ட காலமாக நினைத்தது.

ஆனால் சமீபத்தில் காற்றின் பெரிய நீர்த்துளிகள் வழியே மட்டுமின்றி, 5 மைக்ரான்களைக் காட்டிலும் மிகச்சிறிய துளிகள் வழியாகவும் பரவுவதற்கு சாத்தியம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

காற்றின் வழியே பரவும் கொரோனா போன்ற நோய்த்தொற்றுக்களைத் தடுப்பது எப்படி?

* மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதனால் காற்றின் வழியே பரவும் கிருமிகளுடன் தொடர்பு கொள்ளும் அபாயம் குறையும்.

* அவசியம் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.

* நல்ல காற்றோட்டம் உள்ள அறைகள் காற்றை வேகமாக சுத்தப்படுத்த உதவுகின்றன.

* தும்மல் அல்லது இருமலின் போது கட்டாயம் கைக்குட்டைகள் அல்லது முழங்கைகளைக் கொண்டு மறைக்க வேண்டியது அவசியம்.

* கூடுதலாக, தேவையில்லாமல் முகம், மூக்கு மற்றும் கண்களைத் தொடாதீர்கள்.

வான்வழி பரவும் நோய்களை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், நோய்வாய்ப்படும் அபாயத்தைக் குறைக்க ஒருசில நடவடிக்கைகளை எடுக்கலாம்.

* குறைந்தது 20 நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுங்கள்.

* பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்திடுங்கள்.

* உடல்நிலை சரியில்லாத போது வீட்டிலேயே இருங்கள்.

* நீங்கள் மற்றவர்களுடன் இருக்கும் போது, கிருமிகள் பரவாமல் இருக்க அல்லது அந்த கிருமிகளை சுவாசிப்பதைத் தடுக்க முகக்கவசம் அணியுங்கள்.

* தும்மல் அல்லது இருமலின் போது வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடுங்கள்.

* அசுத்தமான கைகளால் முகம் அல்லது மற்றவர்களைத் தொடாதீர்கள்.

காற்றின் மூலம் பரவும் நோய்களான சின்னம்மை, இன்ப்ளூயன்ஸா, தட்டம்மை, கக்குவான் இருமல் போன்றவை தாக்கும் அபாயத்தைக் குறைக்க தடுப்பூசிகள் உதவும்.

எனவே அந்தந்த நேரத்தில் போட வேண்டிய தவறாமல் போட்டுக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top