செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசியின் அற்புதம்

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பயன்படுத்திய சில மூலிகைகள் அனைத்துமே நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவே பயன்படுகிறது.

அந்த வகையில் துளசி பானம் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காரணம் இதிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் தன்மை தொற்று நோய் நம்மை அண்ட விடாமல் காக்கிறது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில், எங்கு பார்த்தாலும் கொரோனா பற்றிய பீதி தான் மக்களிடையே நிலவி வருகிறது.

ஒரு பக்கம் கொரோனா பற்றிய பயங்கள் இருந்தாலும் மறுபக்கம் மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களையும் சுகாதார நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகின்றனர்.

மக்கள் தங்கள் மூதாதையர்கள் சொன்ன ஆயுர்வேத வழியை கடைபிடிக்க தயாராகி விட்டார்கள். அந்த வகையில் அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை சளி, இருமல் என்றால் நம் நினைவுக்கு வருவது துளசி கஷாயம் தான்.

ஏனெனில் துளிசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சளிக்கு காரணமான வைரஸ்களை அழிக்கிறது. அதன் காரத்தன்மை சளியை இளகச் செய்து வெளியேற்றுகிறது.

எனவே தொற்று நோயை விரட்ட சமூக விலகல் அவசியம் அதைப் போல தொற்று நோய் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவது அவசியம் என்கிறார்கள் ஆயுர்வேத வல்லுநர்கள்.

இதனால் நமக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

தேவையான பொருட்கள்

4-5 துளசி இலைகள்

டீ ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள்

டீ ஸ்பூன் கருப்பு மிளகு தூள்

3-4 கருப்பு கிறிஸ்துமஸ் பழம்

பயன்படுத்தும் முறை

ஒரு கனமான பாத்திரத்தில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதில் துளசி, இலவங்கப்பட்டை தூள், கருப்பு மிளகு, இஞ்சி, திராட்சையும் சேர்க்கவும்.

நன்றாக கிளறி விட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பிறகு ஆறியதும் வடிகட்டியை கொண்டு வடிகட்டி குடியுங்கள்.

இதன் சுவையை அதிகரிக்க ஒரு துண்டு வெல்லம் அல்லது லெமன் ஜூஸ் கூட கலந்து கொள்ளலாம். உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும் பூஸ்டர் பானம் ரெடி.

இந்த துளசி பானம் உங்க செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. அதே நேரத்தில் துளசி, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை போன்றவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்றை எதிர்த்து போராட உதவுகிறது.

துளிசியில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சுவாச பிரச்சனைகளை போக்க உதவுகிறது. எனவே இந்த துளசி பானத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை என குடித்து வருவது உங்க நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். சளி, காய்ச்சலை விரட்டுவதோடு தொற்றில் இருந்து சீக்கிரம் மீள உதவி செய்யும்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top