செய்திகள்

கண்கள் முழுதும் கோபத்துடன் ஜார்ஜ் கொலைக்கு நீதி கேட்கும் சிறுமி

முகமெல்லாம் கோபத்துடனும் கண்கள் முழுக்க ஆத்திரத்துடன், நடையில் ஒரு ஆவேசத்துடன், ஜார்ஜ் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டத்தில் செல்லும் சிறுமி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார்.

“நீதி இல்லை என்றால், அமைதி இல்லை” என்ற சிறுமியின் முழக்க வீடியோ உலக மக்களிடையே பெரும் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் காவல்துறையால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் அந்த இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பான வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இப்போது ஜார்ஜ் கொலை சம்பவமானது, உள்நாட்டு பிரச்சனையாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது… லட்சக்கணக்கான கறுப்பின மக்கள் ஒன்றதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

இவர்களின் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்கார்களை பார்த்து ஜனாதிபதி டிரம்ப் ரொம்பவே டென்ஷன் ஆகி வருகிறார். போராட்டக்காரர்களை அடக்கி ஒடுக்குங்கள்” என்றும், “இந்த போராளிகளை நாய்கள், திருடர்கள்” என்றும் டிரம்ப் சொன்னதை அவர்களுக்கு மேலும் கொதிப்பை தந்தது.

டிரம்ப்பின் இது மாதிரி வன்முறை தூண்டும் கருத்துக்களுக்கு அந்நாட்டின் காவல்துறை அதிகாரி ஒருவரே எச்சரித்திருந்தார்.

பிறகு டிரம்பின் 2வது மனைவின் மகள் டிப்ஃபனி இந்த இந்த போராட்டத்துக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை தந்தார்.

இது டிரம்ப் கொஞ்சமும் எதிர்பாராதது. இது எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்பாராத விதமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டதும் யாருமே எதிர்பாராதது. கறுப்பு கலர் மாஸ்க் அணிந்து, முழங்காலிட்டு ஆதரவை தெரிவித்தார்.

பெரிய பெரிய தலைவர்களே இப்படி ஆதரவை தெரிவித்து வரும் நேரத்தில்தான் சிறுமி ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றதும் வியப்பை தந்து வருகிறது.

ஜார்ஜ் மரணத்திற்கு நீதி வேண்டிய பேரணியில் கலந்து கொண்டார் அந்த சிறுமி. போராட்டத்தில் எல்லோருக்கும் முன்னால் ஆவேசமாக நடை போட்டு செல்கிறார்.

அப்போது “நீதி இல்லை என்றால், அமைதி இல்லை” என்று கோஷத்துடன் கேள்விகளை எழுப்பி கொண்டே நடக்கிறார்.

இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர் செய்து வருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ஜார்ஜ் மரணம் வல்லரசை ஆட்டம் காண வைத்து வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top