செய்திகள்

காதலியை கர்ப்பிணியாக்கி தலைமறைவான காதலன்… இறுதியில் நடந்த சம்பவம்

காதலியை கர்ப்பிணியாக்கி தலைமறைவான காதலன்… இறுதியில் நடந்த சம்பவம்

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியை சேர்ந்த பிரபு மற்றும் புனிதா இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

காதலன் பிரபுவின் ஆசைக்கு புனிதா அவ்வப்போது இணங்கியதாக தெரியவருகிறது. இதன் காரணமாக புனிதா கர்பிணியாகவே, இந்த விஷயத்தை காதலனிடம் தெரிவித்து திருமணம் செய்யக்கூறி கூறியுள்ளார்.

இவர்களின் காதல் வாழ்க்கைக்கு பிரபுவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, கடந்த மாதத்தின் போது பிரபு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணின் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், வடக்காட்டில் வசித்து வந்த பிரபுவை கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, திருமணத்திற்கு சம்மதம் எட்டப்பட்ட நிலையில், வடகாடு காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top