செய்திகள்

ஊரடங்கிலும் தொடர்ந்து மரணத்தில் முடிந்த கள்ளக்காதல்…

Kanchipuram murder case due to illegal affair

ஊரடங்கிலும் தொடர்ந்து மரணத்தில் முடிந்த கள்ளக்காதல்…

தமிழகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் பருத்திக்கொல்லை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், இவரது மனைவி திவ்யா. இருவருக்கும்மூன்று வருடத்திற்கு முன்னர் திருமணம் நடைபெற்றதுஃ

அதே பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரம் கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வருகிறார்.

இந்த நிலையில், திருமணத்திற்கு முன்னதாக சண்முகசுந்தரம் மற்றும் திவ்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

காதலிற்கு திவ்யாவின் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகனிற்கு திவ்யாவை திருமணம் செய்து முடித்துள்ளனர்.

இருந்தாலும் காதலை மறக்க இயலாத இருவரும், அவ்வப்போது தனிமையில் சுற்றி வந்துள்ளனர். பின்னர் இவர்களின் காதல் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த விசயம் ஜெய்குமாருக்கு தெரியவரவே, மனைவியை கண்டித்துள்ளார்.

தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக இருவரும் சந்திக்க இயலாத நிலையில், கள்ளக்காதல் ஜோடிகள் தங்களை பிரிய மனமில்லாது இருந்துள்ளனர்.

இந்த நிலையில், திவ்யாவின் வீட்டு வழியே அவ்வப்போது சென்று வந்த சண்முகசுந்திரத்தை காண திவ்யா வீட்டு வாசலில் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து, ஜெயக்குமார் திவ்யா அண்ணன் ஆகியோர் சண்முகசுந்தரத்திடம் சென்று பேசியுள்ளனர்.
வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த ஜெயக்குமார் சண்முகசுந்தரத்தை கட்டையால் தாக்கியுள்ளார்.

சண்முகசுந்தரம் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்கவே, இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top