செய்திகள்

காதலின் பெயரில் சிறுமியை ஏமாற்றி வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம்

சென்னை திருவெற்றியூர் பகுதியை சார்ந்த பெண், அங்குள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “ 17 வயதான மகள், சென்னையில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் கேட்டரிங் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கல்லூரிக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு இவர் திரும்பவில்லை.

எனக்கு தெரிந்த பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இந்த விடயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஆழ்வார் திருநகர் பெரியார் சாலை பகுதியை சார்ந்த உஸைனுல் முஷாரப் (வயது 19) என்ற இளைஞனுக்கு வலைவீசினர்.

இதனையடுத்து இந்த இளைஞன் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள சாமியார் மடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உஸைனுல் முஷாரப்புடன் இருந்த சிறுமியை மீட்டுள்ளனர்.

இது குறித்த விசாரணையில், சிறுமியுடன் கல்லூரியில் பயின்று வந்த உஸைனுல் முஷாரப்க்கும் – சிறுமிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இதில் இடையிலேயே கல்லூரி படிப்பை விட்டுச்சென்ற உஸைனுல் முஷாரப், அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளான்.

சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றிய உஸைனுல் முஷாரப், கல்லூரிக்கு சென்ற சிறுமியை ஆசை வார்த்தை கூறி அங்குள்ள இல்லத்திற்கு அழைத்து வந்துள்ளான்.

பின்னர் தினமும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனையடுத்து உஸைனுல் முஷாரப் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top