செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி ஏற்பட்ட கொடுமை… அதிர வைக்கும் சம்பவம்!

உள்ளாடைகளை கழற்றிய கொடுமை

வடமாநிலத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மதுரவாயலில் உள்ள எம்.எம்.டிஏ பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு இவர் வழக்கம் போல தூங்க சென்ற நிலையில், இவரது 10 வயது மகள் இயற்கை உபாதை கழிக்க வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

ஆனால், வெகு நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் சிறுமியை தேடியுள்ளனர். எங்கும் சிறுமியை காணவில்லை.

இதனையடுத்து தனது வீட்டின் பின்பக்கமாக சிறுமி அழுவது போல சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கு சென்ற சீனிவாசன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவர் பலத்த காயம் அடைந்திருந்ததால் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த போலீசார், மாடியின் பின்புறத்தில் பலத்த காயங்களுடன் சிறுமி எப்படி கிடந்தார் என்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமி இயற்கை உபாதை கழிக்க வந்த போது, அப்பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சிறுமியை அழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளமை தெரியவந்தது.

அத்துடன், அதனை மறைக்க 3ஆவது மாடியில் இருந்து சிறுமியை தூக்கி எறிந்ததும், சிறுமியின் பெற்றோர் குழந்தையை தேடும் போது அவர் மேல் சந்தேகம் வராமல் இருக்க அவரும் கூட சேர்ந்து சிறுமியை தேடுவது போல நாடகம் செய்ததும் அம்பலமானது.

இதனையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top