செய்திகள்

இந்த பொருட்களை தொட்டா மறக்காம கை கழுவுங்க…

தற்போது உலகத்தையே கொரோனா வைரஸ் பதற வைத்துக் கொண்டிருக்கிறது.

உலகெங்கிலும் சுமார் 2,50,000-த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

10,000-த்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்புடன் இருப்பதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொருவரையும் மேற்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்தவாறு தான் உள்ளன.

இந்த வைரஸ் தொற்றிற்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தை பிறப்பிடமாக கொண்டது. இது நுரையீரலைத் தாக்கும் ஒரு தொற்று நோய். சளி, இருமல் வழியாக மனிதரிடமிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது.

இந்த வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது காய்ச்சல், இருமல், தும்மல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டும்.

கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு குறைவாக இருப்பவர்களை எளிதில் தாக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் நோயெதிர்ப்பு சக்தி முதியவர்கள், குழந்தைகள், உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும்.

எனவே இவர்கள் கொரோனா வைரஸ் பரவும் இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதோடு ஒவ்வொருவரும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள், ஜூஸ்கள் போன்றவற்றை எடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைத் தடுக்க ஒருசில அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துகிறது. அவையாவன:

* அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.

* தும்மல் அல்லது இருமல் பிரச்சனை உள்ளவர்களிடம் இருந்து குறைந்தது 1 மீட்டர் அல்லது 3 அடி இடைவெளியைப் பராமரிக்கவும்.

* அசுத்தமான கைகளால் கண்கள், மூக்கு மற்றும் வாய் பகுதியை தேவையில்லாமல் தொடாதீர்கள்.

* தும்மல் அல்லது இருமலின் போது, வாய் மற்றும் மூக்குப் பகுதியை டிஸ்யூ பேப்பர் அல்லது துணியால் மூடிக் கொள்ளவும்.

* காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.

புதிய கொரோனா வைரஸ் முதன்மையாக ஒரு சுவாச நோயாகும். இது பாதிக்கப்பட்ட நபர் இருமலின் போது அல்லது தும்மும் போது பொதுவாக வான்வழி நீர்த்துளிகள் வழியாக பரவுகிறது.

இந்த வைரஸ் துகள்களைச் சுமக்கும் நீர்த்துளிகள் உங்கள் மூக்கு அல்லது வாய் அல்லது கண்களில் இறங்கினால் நோய்வாய்ப்படலாம்.

புதிய ஆய்வின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நிலப்பரப்புக்களில் ஒரு நாளைக்கு 1 மணிநேரம் வரை உயிருடன் இருக்குமாம். அதோடு வைரஸ்களை எடுத்துச் செல்வதில் மென்மையான, அசாதாரண மேற்பரப்புகள் சிறந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எனவே ஒருசில இடங்கள் மற்றும் பொருட்களைத் தொட்டால், மறக்காமல் கைகளைக் கழுவுங்கள். இப்போது அவை எந்தெந்த பொருட்கள் மற்றும் இடங்கள் என்று காண்போம்.

எதெல்லாம் தொட்டால் கைகளைக் கழுவ வேண்டும்?

* பணம், நாணயங்கள்

* கதவுகள் அல்லது கைப்பிடிகள்

* மாடிப்படி கைப்பிடி

* டேபிள் டாப்

* செல்லப்பிராணிகள்

* மொபைல்/ஸ்மார்ட்போன்

* காய்கறி வெட்டும் பலகை

* சமையலறை ஸ்பாஞ்ச்

* பேனாக்கள்

* அடி பம்புகள்

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top