செய்திகள்

அமலாபால் திருமண புகைப்படத்திற்கு பின் ஒளிந்திருக்கும் மர்மம்!

அமலாபால்

‘மைனா’ படத்தில் அறிமுகமான அமலா பால் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர்.

பிறகு ஏ.எல் விஜய இயக்கத்திலும், அமலா பால் நடிப்பதிலும் முழு கவனம் செலுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டு விஜய் பெற்றோரின் சம்மதத்துடன் ஐஸ்வர்யா என்ற பெண்ணை மணந்து கொண்டார்.

இதனிடையே அமலாபால் பாடகர் ஒருவரைக் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.

ஆனால், அமலா பால் அவர் காதலிப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அமலா பால் காதலர் பாவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் திருமணம் செய்து கொண்ட போட்டோஸை வெளியிட்டார்.

அதற்கு பலரும் கமெண்ட் செய்ய, அவர் சில மணி நேரங்களிலேயே டெலிட் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த புகைப்படங்கள் குறித்து விளக்கமளித்து அமலாபாலின் மேனேஜர், “அமலாபால் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என தகவல் வெளியானது வெறும் வதந்தி.

இன்று அமலாபால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஈவன்ட் ஒன்றில் எடுக்கப்பட்டவை. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என்று தெரியவில்லை.

திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை” என தெரிவித்துள்ளார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top