செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் இறுதி இரவு… வெளியான தகவல்!

நிர்பயா குற்றவாளிகளின் இறுதி இரவு... வெளியான தகவல்!

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் முகேஷ், வினய், பவண், அக்‌ஷய் ஆகிய நான்கு பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அவர்களது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்களும் உறுதியளித்துவிட்டனர். நாட்டையே உலுக்கிய குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் தூக்கிலிடப்பட்டதும் திஹார் சிறை முன்பாக பெரும் கூட்டம் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும் இன்று தூக்கிலிடப்பட்ட நால்வரின் மனநிலை நேற்று இரவில் எப்படி இருந்தது என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

தண்டனையை தள்ளிப் போட சட்ட ரீதியாக எவ்வளவு முயலமுடியுமோ அதை செய்துபார்த்த அவர்கள் இதற்கு மேலும் முடியாது என்பதை நேற்று உணர்ந்திருப்பர்.

அந்த இரவில் நான்கு குற்றவாளிகளில் முகேஷ், வினய் ஆகிய இருவரும் தங்களது இரவு உணவை எடுத்துக்கொண்டனர். பவண், அக்‌ஷய் ஆகிய இருவரும் கலக்கத்துடனே இருந்துள்ளதோடு, உணவு வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

மேலும் முகேஷின் உறவினர்கள் அவரை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நால்வரும் கடைசி ஆசை எது என்பதில் கையெழுத்திடவில்லை. அவர்களது உடமைகள், சிறையில் இருந்த காலத்தில் அவர்கள் ஈட்டிய பணம் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கப்படும்.

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டாச்சு; நீண்ட போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி!
தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து நிர்பயா தாயார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top