செய்திகள்

யூ டியூபை பார்த்து 8 மாத கர்ப்பிணி காதலிக்குப் பிரசவம் பார்த்த காதலன்… குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்….

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வசித்து வரும் சௌந்தர் என்பவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவியைக் காதலித்து வந்துள்ளார்.

அந்த மாணவியும் அவரது காதலை ஏற்றுக்கொள்ள, இருவரும் 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து வைக்குமாறு அவரவர் வீட்டில் கேட்டுள்ளனர்.

ஆனால் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதிக்கவில்லையாம். இதனையடுத்து இவர்கள் நெருங்கிப் பழக, அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார்.

8 மாதம் வரை தான் கர்ப்பமாக இருப்பதைப் பெற்றோர்களிடம் மறைத்த அந்த மாணவி, இதற்கு மேல் மறைக்க முடியாது என்று சௌந்தரிடம் கூறியுள்ளார்.

அதன் பின்னர், சௌந்தர் மாணவியை அழைத்துக் கொண்டு அப்பகுதியிலிருந்த தைலமரத்தோப்புக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது, சௌந்தர் மரத்தடியிலேயே யூ டியூபை பார்த்து அந்த மாணவிக்குப் பிரசவம் பார்த்துள்ளார்.

இதன்போது, குழந்தையின் கை மட்டும் தனியாக வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மாணவிக்கு அதிகமாக ரத்தப்போக்கு ஆகியுள்ளது.

இதனால் பயந்து போன சௌந்தர் மாணவியின் அம்மாவை வரவழைத்து ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அந்த மாணவியைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்து உயிரிழந்த ஆண் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

இருப்பினும், ரத்தப்போக்கு அதிகமாக இருப்பதால் மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கும்மிடிப்பூண்டி காவல்துறையினர் கர்ப்பமானதை மறைப்பதற்காக சுயபிரசவம் செய்த குற்றத்தினால் சௌந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top