செய்திகள்

நாளை மறுநாள் தூக்கு… இன்று ஒத்திகை!

நிர்பயா

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20ஆம் திகதி விசாரணை நீதிமன்றம் தூக்கிலிட உத்தரவிட்ட நிலையில் இன்று அதற்கான ஒத்திகை திகார் சிறையில் நடைபெற்றிருக்கிறது.

2012 டிசம்பர் 16ஆம் திகதி, டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா, முகேஷ் சிங், வினய் சர்மா ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.

குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என்று நிர்பயா தாயார் 7 ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், குற்றவாளிகளோ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது, அது தள்ளுபடி செய்யப்படும் பட்சத்தில் மேல்முறையீடு செய்வது, குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்புவது என தங்களுக்கான சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பித்து வந்தனர்.

அவர்களுக்கான சட்ட வாய்ப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் சர்வதேச நீதிமன்றத்தை நாடினர். இதனிடையே குற்றவாளிகள் 4 பேருக்கும் மார்ச் 20ஆம் திகதி தூக்குத் தண்டனை விதிக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி தண்டனை நிறைவேற்றப்பட இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கேங்மேன் பவன் ஜல்லத் தூக்கிலிடும் பணிக்காக நேற்று திகார் சிறைக்கு வந்தார். இந்நிலையில் இன்று காலை குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கான ஒத்திகை நடைபெற்றுள்ளது.

குற்றவாளிகளின் எடைகொண்ட 4 பொம்மைகள் மூலம் இந்த ஒத்திகை நடைபெற்றுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு நான்கு பேரையும் தூக்கிலிடுவது உறுதி எனச் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top