செய்திகள்

விண்வெளி அதிசயம்… இரும்பு மழை பெய்யும் ஒரு புதிய கோள்

விண்வெளி அதிசயம்

புத்தம் புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் தங்க மழை எல்லாம் இல்லை. ஆனால், இரும்பு மழை பெய்கிறது என்பதை விண்வெளி வீரர்கள் வியந்து பார்த்திருக்கிறார்கள்.

இது ஹாலிவுட் திரைப்படம் அல்ல. நமக்கு தெரியாமல் தீவிரமாக செயல்படும் மற்றொரு உலகில் நடைபெறும் இயற்கை நிகழ்வு இது.

வாஸ்ப் 76பி என்று அறியப்படும் இந்த கோள், அதனுடைய நட்சத்திரத்தை சுற்றி வரும்போது, அதன் பகல் பகுதி வெப்பநிலை 2,400 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கிறது. இந்த வெப்பநிலை உலோகங்களை ஆவியாக்கும் தன்மை கொண்டது.

இரவு நேரப் பகுதியில் இந்தக் கோளின் வெப்பநிலை 1400 டிகிரியாக குறைந்துவிடுகிறது. இந்த வெப்பநிலையில், பகல் நேரத்தில் ஆவியான உலோகங்கள் இறுகி மழையாகப் பெய்கின்றன.

இது ஒரு வினோதமான சூழல் என்று ஜெனீவாவை சேர்ந்த டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் விளக்கம் தருகிறார்.

தண்ணீர் துளிகளுக்கு பதிலாக இரும்பு துளிகளின் சாரால் அடிப்பது எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்று டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் தெரிவித்தார்.

நேச்சர் என்ற சஞ்சிகையில் இந்த கோள் குறித்த கண்டுபிடிப்புகளை சுவிஸ் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

வாஸ்ப் – 76பி என்ற இந்த கோள் குறித்து முழு ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் எக்ஸ்பிரசோ என்ற கருவியை சிலியில் பொருத்தி எப்படி பயன்படுத்தியது என்று விளக்குகிறது.

எக்ஸ்பிரசோ ஸ்பெக்ட்ரோமீட்டர் பொறுத்தப்பட்டுள்ள மிக பெரிய தொலைநோக்கி.
இந்த கோள் பூமியில் இருந்து 640 ஒளியாண்டு துரத்தில் உள்ளது.

வாஸ்ப் 76பி தனது நட்சத்திரத்திற்கு மிக அருகில் உள்ளது. வாஸ்ப் 76பி தன்னை தானே சுற்றிக்கொள்ள 43 மணி நேரமாகிறது.

இந்த கோள் எப்போதும் தனது நட்சத்திரத்தை ஒரு புரத்தில் இருந்து மட்டுமே பார்க்க முடியும். நம் பூமியின் நிலவும் இதையே தான் செய்கிறது, நிலவின் ஒரு புறத்தை மட்டுமே நாம் பார்க்க முடியும்.

உண்மையில் இந்த கோளில் நிலவும் அதி வெப்பத் தன்மையால் மேகங்கள் காணப்படுவதில்லை. வளிமண்டலத்தில் உள்ள அனைத்து மூலக்கூறுகளும் தனித்தனி அணுக்களாக சிதறுகின்றன.

இங்கு நிலவும் வெப்ப நிலை மாற்றங்களால் மணிக்கு 18,000 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையான காற்று வீசும் என டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் கூறுகிறார்.

எக்ஸ்பிரசோ ஸ்பெக்ட்ரோமீட்டரைப் பயன்படுத்தி கடுமையான இரும்பின் வெப்பநிலையை அங்கு கண்டுபிடித்துள்ளனர்.

இரவு நேரம் நிலவும் ஒரு புறத்தில் 1400 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் இரும்பு ஆவி செறிவடைந்து மேகமாகவும், மழையாகவும், துளிகளாகவும் மாறுகிறது.

மழையாகவும் துளிகளாகவும் வெளிவருபவை கோளின் ஆழமான பகுதிக்கு சென்று சேர்ந்தால் இந்த எக்ஸ்பிரஸோ கருவியால் அதை ஆராய முடியாது என்று ஹெரேயின்ச் கூறுகிறார்.

வியாழனை விட வாஸ்ப் 76பி இரண்டு மடங்கு பெரிய கோள். பிரிட்டனின் வாஸ்ப் தொலைநோக்கி திட்டம் நான்கு வருடங்களுக்கு முன்பு இந்த கோளை கண்டுபிடித்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோள் தனது நட்சத்திரத்திற்கு அருகில் இருந்து, அனைத்து விதமான இயற்பியல் ஆராய்ச்சிக்கு உகந்த நிலையில் உள்ளதாக டாக்டர் டேவிட் ஹெரேயின்ச் கூறுகிறார்.

இந்த நட்சத்திரத்தாலோ அல்லது நட்சத்திரத்தில் இருந்து வரும் கதிர்வீச்சாலோ வெப்பம் அதிகரித்து, இந்த கோள் அதி வெப்பச் சூழலை கொண்டுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top