செய்திகள்

தும்மல் வந்தால் கொரோனாவா? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க!

தும்மல் வந்தால் கொரோனாவா?

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடுமையான வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 126 பேருக்கு இந்த வைரஸ் பரவி உள்ளது. மொத்தம் 3 பேர் இந்த வைரஸால் இதனால் பலியாகி உள்ளனர். டெல்லியில் ஒருவர் பலியாகி உள்ளார்.

கர்நாடகாவில் ஒருவர் பலியாகி உள்ளார். இன்று மகாராஷ்டிராவில் முதியவர் ஒருவர் இந்த வைரஸால் பலியானார். இந்த வைரஸ் தொடர்பாக நிறைய விழிப்புணர்வு தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

கொரோனா தொடர்பான பீதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே சமயம் இந்த வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதுமான அளவிற்கு இல்லை.

முக்கியமாக மக்கள் பலர் பொய்யான வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்பி பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு இல்லாமல், சில தவறான தகவல்களை மக்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.

அதன்படி இந்த கொரோனா வைரஸ் சிக்கன், மட்டன் மூலம் பரவும் என்பதை நம்ப கூடாது. அதேபோல் இதை சாணம், கோமியம், மது ஆகியவை கொண்டு குணப்படுத்த முடியாது. ரசம் சோறு சாப்பிட்டால் இந்த வைரஸ் குணமாகும் என்ற பச்சை பொய்யை நம்ப வேண்டாம். இதை எல்லாம் நம்பி தேவையில்லாமல் நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.

அதேபோல் நிலவேம்பு கசாயம் குடித்தால் வைரஸ் வராது என்பதும் பொய்யானது. நிலவேம்பு கசாயத்திற்கு சளியை போக்கும் சக்தி மட்டுமே இருக்கிறது. வேறு திறன் இதற்கு கிடையாது. இதனால் நிலவேம்பு கசாயத்தை குடித்தால் எல்லாம் சரியாகும் என்றும் வதந்திகளை நம்ப வேண்டும்.

அதேபோல் தும்மல் வந்தால் கொரோனா வைரஸ் இருப்பதாக சிலர் அச்சப்படுகிறார்கள். இதை நம்ப கூடாது. தும்மல் என்பது பல்வேறு காரணங்களால் வர வாய்ப்புள்ளது.

அதே சமயம் தொடர்ந்து தும்மல் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த மூன்று விஷயங்கள் கொரோனவிற்கான அறிகுறி என்பதை மறக்க வேண்டாம்.

1. இருமல்

2. காய்ச்சல்

3. மூச்சு விடுவதில் சிரமம்.

உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும். மருத்துவமனைக்கு தனியாக செல்வதை விட இது சிறப்பு. இதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இலவச உதவி எண் : +91-11-23978046 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நான்கு உதவு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியாவில் எங்கெல்லாம் கொரோனா சோதனைகளை மேற்கொள்ளலாம் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 52 இடங்களில் கொரோனா சோதனைகளை மேற்கொள்ள முடியும்.

தமிழகத்தில் சென்னை நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி, தேனி ஆகிய இடங்களில் இந்த வைரஸ் சோதனையை மேற்கொள்ளலாம்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top