செய்திகள்

ஆசிரியைக்கு காதல் தொல்லை… கொலை மிரட்டல் விடுத்த இளைஞன் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெருப்பகுதியை சார்ந்த அஜந்தா. என்பவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இதே பகுதியை சார்ந்த செல்வகுமார் (வயது 32) என்ற இளைஞன் மீன் வியாபாரியாக பணியாற்றி வருகிறான்.

இந்த நிலையில், செல்வகுமார் அஜந்தாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதுடன், அஜந்தாவிடம் தனது காதலை தெரிவித்த நிலையில், அவர் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளர்.

இதனால் செல்வராஜ் அஜந்தாவிற்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து அஜந்தா, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர்கள் செல்வகுமாரை அழைத்து கண்டித்த நிலையில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அஜந்தாவை தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.

பயந்துபோன அஜந்தா மற்றும் அவரது பெற்றோர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வகுமாரை கைது செய்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top