செய்திகள்

சேலைக் கட்டியிருந்த போதும்… சிலம்பம் சுற்றிய நடிகை ஜோதிகா..

ஜோதிகா

விருது விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை ஜோதிகா, அசத்தலாய் சிலம்பம் சுற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமின்றி, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ஜோதிகா. குஷி, வேட்டையாடு விளையாடு, பூவெல்லாம் உன் வாசம், சந்திரமுகி, தூள், காக்க காக்க, மொழி உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றிப்பெற்றன.

1997 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ஜோதிகா, கடந்த 2006ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சூர்யாவுடன் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் மற்றும் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய 7 படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா.

திருமணத்திற்கு பிறகு ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் நடித்துக்கொடுத்தாரே தவிர புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். இதனை தொடர்ந்து திருமண வாழ்க்கையில் பிஸியான ஜோதிகா அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். குழந்தைகள் தற்போது ஓரளவுக்கு வளர்ந்துள்ள நிலையில் நடிகை ஜோதிகா 2015ஆம் ஆண்டு முதல் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி ஆனார். தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். மகளிர் மட்டும், நாச்சியால், காற்றின் மொழி, ராட்சசி உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இந்நிலையில் சென்னை ட்ரேட் சென்டரில் ஜேஎஃப்டபிள்யூ விருது விழா நடைபெற்றது. இதில் சேலையில் அசத்தலாக பங்கேற்றார் ஜோதிகா. பின்னர் சேலையிலேயே துள்ளிக் குதித்து சுற்றி சுழன்று சிலம்பம் சுற்றினார் ஜோதிகா.

ஜோதிகா சிலம்பம் சுற்றும்போதும் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top