செய்திகள்

நான் திருநங்கைதான்.. பச்சையாக திட்டித் தீர்த்த பிக்பாஸ் நடிகை

மீரா மிதுன்

தன்னை திருநங்கை என்று கூறிய நெட்டிசனை பிக்பாஸ் பிரபலம் ஒருவர் பச்சையாக திட்டியுள்ளார்.

2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றவர் மீரா மிதுன்.

வயதை தவறாக கூறியது, திருமணத்தை மறைத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக அவரிடம் இருந்து மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டம் பறிக்கப்பட்டது.

மேலும் ஃபேஷன் ஷோ நடத்தப்போவதாக கூறி இளம் பெண்களிடம் பணம் பறித்ததாகவும் அவர் மீது மோசடிப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து நடிகை மீரா மிதுனின் பெயர் டேமெஜ்ஜானது. அந்த நேரத்தில் தான் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று எப்படியாவது டேமேஜ்ஜான பெயரை மீட்டு விடலாம் என்று எண்ணினார் மீரா மிதுன்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரது பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது.

இயக்குநர் சேரன் மீது கூறிய பொய்யான குற்றச்சாட்டால் மொத்த பெயரையும் கெடுத்துக்கொண்டார். இதனால் சமூக வலைதளங்களிலும் கழுவி ஊற்றப்பட்டார் மீரா மிதுன்.

இதன் எதிரொலியாக ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் கடுப்பான மீரா மிதுன் மொத்த தமிழ் சினிமாவையும் சாடி வீடியோ வெளியிட்டு வந்தார்.

எப்படியாவது சினிமா வாய்ப்பை பெற்று விட வேண்டும் என எண்ணிய மீரா மிதுன், கவர்ச்சி அஸ்த்திரத்தை கையில் எடுத்தார்.

தொடர்ந்து அரை நிர்வாண போட்டோக்களையும் அரைகுறை ஆடையில் முன்னழகை காட்டும் போட்டோக்களையும் வெளியிட்டு வந்தார். அவற்றை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றினர்.

இந்நிலையில் மீரா மிதுன் தமிழக அரசை பாராட்டி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை திரு என்று குறிப்பிட்டதால் நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.

மேலும் அவரை கிண்டலடித்து கருத்துக்களையும் பதிவிட்டு வந்தனர் நெட்டிசன்கள்.

அதில் ஒருவர் மீரா மிதுனை பார்த்து நீங்கள் திருநங்கையை போல் இருக்கிறீர்கள், உண்மையை சொல்லுங்கள் என்று கூறினார்.

இதனை பார்த்து கோபமடைந்த மீரா மிதுன், ஆமாம் நான் திருநங்கைதான். இந்த செய்தியை பரப்பு.. என்று குறிப்பிட்டு பச்சையாக கெட்ட வார்த்தையால் திட்டினார்.

இதனால் கோபமடைந்த அந்த நெட்டிசன் மரியாதையா பேசு என பதிலுக்கு பதில் பேசினார். இந்த மோதல் தகவல் தீயாய் பரவ, அந்த நெட்டிசன் தனது கமென்ட்டை டெலிட் செய்து விட்டு எஸ்கேப்பாகி விட்டார்.

ஆனாலும் அந்த கமென்ட்டுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அண்மையில் நடிகை ரித்விகா தன்னை கிண்டலடித்த நெட்டிசனை திட்டி நடுவிரலை காட்டி சர்ச்சைக்கு ஆளானார்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top