செய்திகள்

வைரஸை விட வேகமாக பரவிய வதந்தி.. ஆயிரக்கணக்கான கோழிகள் உயிருடன் புதைப்பு

கொரோனா

இந்தியா முழுவதும் கொரோனா அச்சம் எதிரொலித்துள்ள நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 6 ஆயிரம் கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட கொடுமை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் மட்டும் 73 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இறைச்சி மூலமாக கொரோனா பரவுகிறது என்று வதந்தியும் இடையே கிளம்பியது.

வைரஸை விட வதந்தி வேகமாக பரவியதால் பல்வேறு தரப்பு மக்களுக்கு பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக கோழி மூலம் கொரோனா பரவுகிறது என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவிதால் பெரும் அச்சம் நிலவுகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் கொரோனா பீதியினால் பிராய்லர் கோழிகளை ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து, பெரிய குழி தோண்டி உயிருடன் புதைத்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top