செய்திகள்

சின்ன மீனுக்கு தூண்டில் போட்டதே.. பெரிய மீனை பிடிக்கத்தானாம்.. இயக்குநரின் மாஸ்டர் பிளான்!

அவசரம் அவசரமாக அடுத்த படத்தை பண்ண வேண்டாம். பொறுமையா? பெரிய படமாவே பண்ணலாம் என்ற முடிவை எடுத்துள்ள மாஸ் நடிகர், நோலன் இயக்குநருக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

மாஸ் நடிகரின் வாத்தியார் படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இதுவரை இல்லாத அளவுக்கு, வேற லெவல் எனர்ஜியில் காட்சிக்கு காட்சி மாஸ் நடிகர் மிரட்டப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகரின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது, கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பல இயக்குநர்களின் பெயர்கள், கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டதாகவே பல வதந்திகள் காட்டுத் தீ போல வேகமாக பரவியது. ஆனால், கடைசியில் அவர்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பிரைட் நடிகர் படத்தை இயக்கி வரும் அந்த பெண் இயக்குநர் இயக்கத்தில் தான் அடுத்ததாக மாஸ் நடிகர் நடிக்கப் போகிறார் என்பது 90 சதவீதம் உறுதியானதாக தகவல்கள் பரவிய நிலையில், கடைசி நேரத்தில், சில பல காரணங்களை சுட்டிக் காட்டிய மாஸ் நடிகர், அந்த பெண் இயக்குநருடன் கூட்டணி சேராமல் தவிர்த்து விட்டார்.

மாஸ் நடிகருக்கு, பல இயக்குநர்களும், நேரடியாக வலை விரித்து வந்த நிலையில், நோலன் இயக்குநர், மாஸ்டர் பிளான் போட்டு அவரது மகனை வைத்து படம் எடுக்கப் போவதாக, ஒரு அருமையான கதையை கூறியுள்ளார்.

அந்த கதையை கேட்ட மாஸ் நடிகர், இதை நாமே செய்யலாமே என யோசித்து வந்த நிலையில், நோலன் இயக்குநரின் திட்டம் வெற்றி ஆகி உள்ளதாம்.

நோலன் இயக்குநர் சின்ன மீனுக்கு தூண்டில் போட்டதே, அந்த பெரிய மீனை பிடிக்கத் தான் என்பது தற்போது தெளிவாகி உள்ளது. ஆனால், பலரும் எதிர்பார்த்த அந்த பிளாக்பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் இல்லையாம்.

இது வேறு ஒரு சூப்பர் கதையாம். இசை வெளியீட்டு விழாவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

நோலன் இயக்குநர் மாஸ் நடிகரை வைத்து இயக்குவது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அந்த உச்ச நடிகரை வைத்து, அவர் இயக்கிய போன படம் போல இல்லாமல் இருந்தால் போதும் என்பதுதான் முக்கியமான கருத்தாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், நோலன் இயக்குநர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அந்த போலீஸ் படம் பயங்கர சொதப்பல் சொதப்பியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top