செய்திகள்

இன்னொருத்தன் எதுக்கு.. காதலியுடன் அம்மாவையும் சேர்த்து கொலை

murder, east delhi double murder, ex lover killed girl friend including her mother, girl friend murder, கொலை, டெல்லியில் இரட்டை கொலை, காதலி உட்பட 2 பேரை கொன்ற இளைஞர்,

“நான் இருக்கும்போது இன்னொருத்தனா?” என்று ஆத்திரமடைந்த இளைஞர் காதலியை கொன்றதுடன், அவர் அம்மாவையும் சேர்த்து கொலை செய்துள்ளார்.

டெல்லியில் வசுந்தரா என்க்ளேவ் என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் சுமிதா மேரி. இவரது மகள் சமிர்தா.

இவருக்கு 25 வயதாகிறது. 5 ஸ்டார் ஹோட்டலில் இன்டர்னெட்டாக வேலை பார்த்து வந்தார்.

விக்ராந்த் என்ற இளைஞருடன் சமிர்தாவுக்கு காதல் ஏற்பட்டது.. ஆனால் விக்ராந்தின் சில நடவடிக்கைகள் பிடிக்கததால் அவரை விட்டுவிலகினார்.. பிறகு இன்னொரு நபரை சமிர்தா காதலிக்க தொடங்கினார்.

இதுதான் விக்ராந்த்துக்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. அதனால் தனக்கு கிடைக்காத காதலி யாருக்குமே கிடைக்க கூடாது என்று முடிவெடுத்தார். கொலை செய்யவும் துணிந்தார்.

சம்பவத்தன்று இரவு சமிர்தாவின் வீட்டுக்கு சென்றார்.. அப்போது சமிர்தா வீட்டில் இல்லை. அதனால் வீட்டுக்கு வெளியிலேயே தன்னுடைய நண்பர் பிரயாக்குடன் காத்து நின்றார்.

இரவு 11 மணிக்கு சமிர்தா காரில் வந்து இறங்கினார். அவர் வீட்டுக்குள் சென்றதும் பின்னாடியே இவர்களும் சென்று, வீட்டில் இருந்து தாய் மற்றும் சமிர்தாவை கொலை செய்துவிட்டு தப்பி உள்ளனர்.

மறுநாள் காலை வீட்டு வேலைக்காரர் வழக்கம்போல் வந்து கதவை தட்டினார். ஆனால் யாருமே திறக்காததால், அக்கம்பக்கத்தினரிடம் இதை பற்றி சொல்லி உள்ளார்.

அவர்களும் தட்டி பார்த்துவிட்டு, சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு சொல்லி உள்ளனர். அவர்கள் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோதுதான் சமிர்தாவும் சுமிதா மேரியும் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டனர்.

அவர்கள் சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கும் அனுப்பினர்.. இதுகுறித்து சமிர்தாவின் தோழி புகார் கொடுக்கவும், அதன்பேரில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.

வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சியும் ஆராயப்பட்டது. அப்போதுதான் காதலனும் நண்பர் பிரயாக்கும் வீட்டிற்குள் செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

அவர்களை காவல்துறையினர் தேடி வரும்போதுதான் விக்ராந்த் கைதாகி உள்ளார். நண்பன் இன்னும் தலைமறைவாகவே உள்ளதால், தேடும் பணி நடக்கிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top