செய்திகள்

கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா? மருத்துவர்கள் எச்சரிக்கை!

கோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா

கோடை வெயில் காரணமாக கொரோனா வைரஸ் பரவாது என்று யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 17 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அதனால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3136 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை குறைந்து வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் சராசரி வெப்பநிலை அளவு 8.72 டிகிரி செல்சியஸை கடந்த பின்புதான் அங்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவது குறையத் தொடங்கியது என சீனாவின் சன்யாட்சென் பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு ஆய்வு வெளியானது.

இந்த செய்தியை பார்த்து இந்தியர்கள் உற்சாகமடைந்தார்கள். ஏனெனில் இந்தியாவில் கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால் கொரோனா பாதிப்பு ஏற்படாது என்று எண்ணினர்.

இதுதொடர்பாக கொரோனா வைரஸை கேலி செய்து மீம்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டன.

இந்த நிலையில், கோடை காலத்தின் வெப்பம் கொரானா வைரஸை கண்டிப்பாக கொன்றுவிடும் அல்லது பலவீனப்படுத்தும் என தவறான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

சளி மற்றும் ஃபுளூ காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல பருவநிலையை சார்ந்த வைரஸாக கொரோனா இருக்க வாய்ப்பில்லை என்று மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top