செய்திகள்

கர்ப்பிணி மருமகளை ஏரியில் வீசிய மாமனார்… திடுக்கிடும் தகவல்!

சென்னை

சென்னை பள்ளிகரணை அடுத்த வேங்கைவாசலில் உள்ள மதுக்கடைக்கு மது அருந்துவதற்காக கடந்த 5ஆம் தேதி ஹென்றி ஜெயசில் (33) என்பவர் சென்றார்.

அதே கடையில் மேடவாக்கத்தை சேர்ந்த சேவியர் அருள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் அமுல்ராஜ் இருவரும் மது அருந்தியுள்ளனர்.

அப்போது ஹென்றி ஜெயசில் கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்ததைக் கண்ட இருவரும், அவரிடம் பேச்சுக்கொடுத்து நண்பர்களாக பழகியுள்ளனர்.

பின்னர் அப்பகுதியில் இருக்கும் ஏரி அருகே அமர்ந்து மது அருந்தலாம் எனக்கூறி ஹென்றி ஜெயசிலை அழைத்துச் சென்றுள்ளனர்.

பெரும்பாக்கம் ஏரிக்கரைக்கு அழைத்துச்சென்று ஹென்றியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரியில் வீசிவிட்டு, அவரது தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து தகவல் அடிப்படையில் ஹென்றியின் உடலை மீட்டு அப்பகுதியில் இருந்த சிசிடிவி மூலம் விசாரணையை காவல்துறையினர் தொடங்கினர்.

அதன்படி கொலை வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அமுல்ராஜ் மற்றும் சேவியர் அருளை விசாரணையின் அடிப்படையில் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அமுல்ராஜ் அளித்த வாக்குமூலத்தில் சேவியர் ஏற்கனவே ஒரு பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்தார்.

அதனடிப்படையில் சேவியரிடம் நடத்திய விசாரணையில், தன் மகன் மைக்கல் விஜய்க்கும் தனது மகளின் தோழியான ஒருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் அப்பெண் கர்ப்பமானதாக கூறியுள்ளார்.

இதனால் அப்பெண்ணை பெரும்பாக்கம் ஏரிக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெறித்து கொலை செய்ததுடன், கை, கால்களை நைலான் கயிற்றால் கட்டி ஏரியில் வீசியதாக ஒப்புக்கொண்டார்.

அப்பெண்ணின் உடலை கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி சடலமாக மீட்டுள்ள காவல்துறையினர், அடையாளம் தெரியாத பெண் சடலம் என வழக்குப்பதிந்து விசாரித்து வந்துள்ளனர்.

தற்போது அந்த சடலம் யாரென்பதும், கொலைக்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சேவியரின் மகன் மைக்கல் விஜய்யையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top