செய்திகள்

மாணவியை போதையாக்கி ஓராண்டாக சிரழித்த பக்கத்து வீட்டுக்காரர்

குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பிளஸ்-2 மாணவியை விடுமுறை நாட்களில் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி (17)யின் நடவடிக்கையில் பெற்றோர் சந்தேகமடைந்தனர்.

அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாணவியிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு மாணவி, தங்களது வீட்டருகே வசித்து வரும் ராஜ்குமார் (34) என்பவர் 11 ஆம் வகுப்பு விடுமுறையின்போது குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்றும் அதன் பின்னர் தன்னை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

அதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராஜ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top