செய்திகள்

மசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண் மர்ம மரணம்!

சுங் சூன் மொய்

மசாஜ் சென்டரில் வேலை பார்த்த வடமாநில பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தமை அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செட்டிபேடு தண்டம் பகுதியில்நாகலாந்ததை சேர்ந்த 7 வடமாநில பெண்கள் தங்கி உள்ளனர்.

அனைவருமே ஒரு மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் ஒருவர்தான் சுங் சூன் மொய். இவருக்கு வயது 22. நாகலாந்து மாநில பெண்களுடன் சேர்ந்து மொத்தம் 10 பெண்கள் ஒன்றாக தங்கி வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எல்லோருமே வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர்.பிறகு வழக்கம்போல தூங்க போய்விட்டனர்.

ஆனால் காலையில் மற்ற பெண்கள் எழுந்து பார்த்தபோதுதான் சுங் சூன் மொய் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதை பார்த்துஅலறிய பெண்கள், உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது கொலையா, தற்கொலையா என்றுகூட தெரியவில்லை.

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர் வந்தால்தான் தெரியும்.. தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top