செய்திகள்

அனுமதி இல்லாமலேயே முத்தம் கொடுத்த கமல்!!

அனுமதி இல்லாமலேயே

புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற முத்தக் காட்சி தன்னுடைய அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டதாக நடிகை ரேகா தெரிவித்துள்ளார்.

என்ன சத்தம் இந்த நேரம் பாடலின் நடுவே லிப் லாக் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அந்த காட்சி குறித்து நடிகை ரேகா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ரேகா முன்பே சொன்ன கருத்து என்றாலும் கூட தற்போது இணையத்தில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.

பாடலின் நடுவே உள்ள முத்தக்காட்சி குறித்து தனக்கு தெரியாது என்றும், கமலும் இயக்குனர் பாலச்சந்தரும் தன்னிடம் அது குறித்து சொல்லவில்லை எனக் கூறியுள்ளார்.

அப்போது தனக்கு 16 வயது தான் என்றும், முத்தக்காட்சி இருந்தால் தான் சீன் சிறப்பாக வரும் என்று உதவி இயக்குநர்கள் கூறினர் என ரேகா தெரிவித்துள்ளார்.

சென்ஸார் குழுவினர் ஏற்கவில்லை என்றால் காட்சி நீக்கப்படும் என்று உதவி இயக்குநர்கள் கூறியதாகவும், அப்போது சென்சார் என்றால் என்னவென்று கூட தனக்கு தெரியாது எனவும் ரேகா கூறியிருக்கிறார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் கமல், பாலசந்தர், அந்தப்படத்தில் அவரின் உதவியாளர்களான பணியாற்றிய இயக்குநர்கள் வசந்த், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top