செய்திகள்

கணவன், மனைவிகளை மாற்றிக் கொள்ளும் ஆபத்தான பாலியல் விளையாட்டு!

ஆபத்தான பாலியல் விளையாட்டு

துணைகளை மாற்றிக் கொள்ளும் ஆபத்தான செக்ஸ் விளையாட்டு சென்னையில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வசதியான திருமண ஜோடிகள் வேறொரு கணவன் அல்லது மனைவியுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆபத்தான செக்ஸ் விளையாட்டு சென்னையில் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீவீ என்ற மொபைல் செயலி மற்றும் அதன் பேஸ்புக் பக்கத்தில் துணை மாற்றும் விளையாட்டு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் முதலில் ஜோடிகளின் சந்திப்பு நடக்கிறது.

அடுத்த கட்டமாக நிகழ்ச்சியை நடத்தும் நிர்வாகிகளின் வீடுகளில் ‘கெட்-டூ-கெதர்’ ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதனால் தம்பதிகளுக்கு இடையே நல்ல அறிமுகம் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து தம்பதிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வெளியூர் சாகச பயணங்கள் ஏற்பாடுசெய்து தரப்படுகிறது.

அந்த ஜோடிகள் தனிமையில் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் பதிவு செய்து, வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்படுகிறது.

இவற்றை பார்க்கும் வசதி படைத்த தம்பதிகள், இந்த துணை மாற்றும் விளையாட்டில் பங்கேற்க தூண்டப்படுகிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்ட தொழிலதிபரும், அவரது மனைவியும் இந்த துணை மாற்ற செக்ஸ் தொழிலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விளையாட்டில் யாருடன் வேண்டுமாலும் ஜோடியாக அமர்ந்து சரக்கடிக்கலாம், ஊர் சுற்றலாம், உல்லாசத்தில் ஈடுபடலாம்.

இதில் தவறு ஏதும் இல்லை என்றும், ஜஸ்ட் டைம் பாஸ்க்காக மகிழ்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு என்றும் அந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் தம்பதிகளிடம் வசியமாக பேசி உசுப்பேத்துகின்றனர்.

மேலும் ஆடம்பரமான கார்களில் சென்னையை வலம் வரும் இந்த கும்பல், தினம் ஒரு துணையுடன் சுற்றுவதும் தெரியவந்துள்ளது.

தனியறை எடுத்து உல்லாசமாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள் சொகுசுக் கார்களிலேயே தனிமையை அனுபவிப்பதாக இந்த விளையாட்டில் ஈடுபட்டவர்கள் கூறுகின்றனர்.

சென்னை மட்டுமின்றி டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் இந்த துணை மாற்றக் கும்பல் கிளை விரித்துள்ளதாம்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பின்னணி தற்போது அம்பலமாகியுள்ளது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top