செய்திகள்

தேயிலைத் தோட்டத்தில் சாதாரணமாக நடமாடும் கரடியால் அச்சத்தில் தொழிலாளர்கள்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டு யானை, புலி, கரடி போன்ற பல வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியிலிருந்து வெளியேறி நெடுஞ்சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் சென்று மக்களை அச்சுறுத்தி வருகின்றன.

அந்த வனப்பகுதிக்கு அருகே இருக்கும் பென்னை கிராமத்தைச் சேர்ந்த விஜயன்(26) என்பவர் அவரது நண்பருடன் சுரேஷுடன் நேற்று முன்தினம் வனப்பகுதி வழியாகச் சென்றார்.

அப்போது அங்கே வந்த காட்டு யானை விஜயனை மிதித்துக் கொன்றது. இது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

65 சதவீதம் வனப்பகுதியையே கொண்ட நீலகிரியில் வனவிலங்குகளால் இதே போலப் பல உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், குன்னூர் அருகே இருக்கும் தேயிலைத் தோட்டம் ஒன்றில் கரடி புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் தேயிலை பறிக்க தொழிலாளிகள் யாரும் வேலைக்குச் செல்லவில்லையாம்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top