செய்திகள்

85 வயது மூதாட்டியை வீட்டோடு சேர்த்துக் கொளுத்திய வன்முறை கும்பல்!

வன்முறை கும்பல்

டெல்லியில் 85 வயது மூதாட்டி ஒருவரை வன்முறை கும்பல் வீட்டோடு சேர்த்து எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வன்முறைகள் எல்லாம் சினிமாவில் காட்டப்படுவது. நிஜ வாழ்வில் அப்படி நடக்காது என்று நம்பிய இளம் தலைமுறையினர் அத்தனை பேரின் நம்பிக்கையும் குழிதோண்டிப் புதைத்துள்ளது டெல்லி வன்முறை சம்பவங்கள்.

டெல்லி காம்ரி எக்ஸ்டென்ஷனைச் சேர்ந்தவர் அக்பரி (85). இவரது தன்னுடைய மகன் சயித் சல்மானியுடன் வசித்துவந்தார்.

கலவரம் நிகழ்ந்த அன்று காலை 11 மணிக்கு பால் இல்லை என்று குழந்தைகள் சொல்ல அதை வாங்க சயீத் சல்மானி சென்றுள்ளார்.

அப்போது வீட்டிலிருந்த அவரது மகன் நடந்த விவரத்தை சல்மானியிடம் கூறியுள்ளார். சல்மானி கடைக்கு சென்ற பிறகு 150-200 பேர் கொண்ட கும்பல் அந்த வீட்டுக்கு வந்துள்ளது.

வீட்டில் அவரது 2 மகன்கள், மகள்கள் இருந்துள்ளனர். அவர்கள் வீட்டை உட்புறமாக பூட்டிக்கொண்டனர். வீட்டின் மாடியில் அக்பரி இருந்துள்ளார்.

அங்கு சென்ற வன்முறை கும்பல் அக்பரி வெளியோமல் தடுத்து வீட்டுக்கு தீவைத்துள்ளனர். இதில் தீக்காயம் அடைந்து, மூச்சுத் திணறி அக்பரி இறந்துள்ளார்.

சல்மானி வீடு திரும்பியதும் நடந்த விஷயங்கள் பற்றி குழந்தைகள் கூறியுள்ளனர். மாடிக்கு சென்று பார்த்தபோது தீக்கிரையான கட்டிடத்துக்குள் அக்பரி சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து காவல்துறை தீயணைப்புத் துறை என அனைத்துத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 மணி நேரம் கழித்து இரவு வீட்டுக்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் அக்பரி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சல்மானியின் துணிக் கடையும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இந்திரா காந்தி படுகொலை நேரத்தில் சீக்கியர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் நடந்தது. அதைக் காட்டிலும் அதிக அளவில் தற்போது உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top