செய்திகள்

அசிங்கம் அசிங்கமா படுக்கைக்கு கூப்பிடறாங்க.. காவல்துறையிடம் நடிகை குமுறல்

நடிகை காயத்ரி சாய்நாத்

அசிங்க அசிங்கமாக பேசி பாலியல் தொழிலுக்கு தன்னை போன் செய்து அழைப்பதாக நடிகை காயத்ரி சாய்நாத் காவல்துறையில் புகார் தந்தார்.

இதையடுத்து காவல்துறையினரின் விசாரணையில், நடிகையின் பெயரை ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் ஷேர் செய்த பீட்சா டெலிவரி நபர் பரமேஸ்வரனை காவல்துறையினர் அலேக்காக தூக்கி உள்ளனர்.

சென்னையை சேர்ந்தவர் காயத்ரி சாய்நாத். இவர் ஒரு நடிகை. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். தெலுங்கிலும் நடித்து வருகிறார். மேலும் பேஷன் டிசைனராகவும் உள்ளார்.

இவர், தேனாம்பேட்டை மகளிர் காவல்துறை நிலையத்தில் ஒரு புகார் தந்தார். அதில் “எனக்கு நிறைய செல்போன் நம்பர்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.

எல்லாருமே ஆபாசமாக பேசுகிறார்கள். பாலியல் தொழிலுக்கு என்னை அழைக்கிறார்கள்.” என்று சொன்னதுடன், சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ், மகேஸ்வரன் ஆகிய 3 பேரின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களது நம்பர்களையும் புகாரில் சேர்த்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து காவல்துறையினர் காயத்ரி சாய்நாத் குறிப்பிட்ட அந்த 3 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணையில் இறங்கினர்.

அவர்களது செல்போன் நம்பர்களை வைத்து ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்கள் தகவல்களை ஷேர் செய்ததும், ஆபாச வீடியோ வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பிலும் நடிகை காயத்ரி சாய்நாத் நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்ததும் தெரியவந்தது.

அதனால், அந்த ஆபாச வாட்ஸ்அப் குரூப்பில் காயத்ரி சாய்நாத்தின் நம்பரை ஷேர் செய்தவர் யார் என்று விசாரணையை காவல்துறையினர் முடுக்கினர்.

அப்போது டோமினோஸ் பீட்சா டெலிவரி செய்யும் பரமேஸ்வரன்தான் இந்த வேலையை செய்தது என கண்டுபிடித்தனர்.. உடனே பரமேஸ்வரனை பிடித்து விசாரணை செய்தபோதுதான் அனைத்து விஷயமும் வெளியே வந்தது.

கடந்த பிப்ரவரி திகதி தேதி பீட்சா ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார் காயத்ரி சாய்நாத்.. அந்த பீட்சாவை பரமேஸ்வரன் டெலிவரி செய்வதற்காக காயத்ரிக்கு அடிக்கடி செல்போனில் கூப்பிட்டு பேசியுள்ளார்.

பீட்சா டெலிவரி செய்யும்போது, பரமேஸ்வரனுக்கும், காயத்ரிக்கும் அட்ரஸ் சம்பந்தமாக தகராறு வந்துள்ளது.. இந்த ஆத்திரத்தில்தான காயத்ரியீன் நம்பரை, ஆபாச வாட்ஸ் அப் க்ரூப்பில் பழிவாங்குவதற்காகவே பரமேஸ்வரன் போட்டுள்ளது தெரியவந்தது.

எங்கள் பக்கத்தை Like செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular


colombotamil
To Top